ஐ ஹேட் யூ, பட் – பகுதி 11
அத்தியாயம் 7 புகழ்ச்சியை ‘போதை’ என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. கண்ணை மறைக்க கூடியது அது. புத்தியை மழுங்கடிக்க செய்வது அது. ப்ரியாவுக்கு தன்னை யாராவது புகழ்ந்தால் மிகவும் பிடிக்கும். அடுத்தவர்கள் தன்னை பற்றி பெருமையாக பேசும்போது அவளுடய மனதிலும், உடலிலும் பரவுகிற அந்த பரவசம் பிடிக்கும். சிறியதொரு பாராட்டுக்கே சிட்டென விண்ணில் பறக்க ஆரம்பித்து விடுவாள். ஆயிரம் பேர் கூடியுள்ள அரங்கில், அத்தனை பெரும் அவளுக்காக கைகள் தட்டினால் என்ன ஆவாள்..?? அருகில் இருக்கும் அசோக்கை […]